follow the truth

follow the truth

December, 23, 2024
Homeவணிகம்2023 சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடிய HNB FINANCE

2023 சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடிய HNB FINANCE

Published on

நாட்டின் முன்னணி ஒருங்கிணைந்த நிதி நிறுவனமான HNB FINANCE PLC, பணிபுரியும் இடத்திலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் பெண்களை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அவர்கள் சார்பாக 2023 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினமான 8 மார்ச் 2023 அன்று ஒரு சிறப்பு நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்தது. “நாட்டின் பெருமைக்குரியவள்” என்ற தொனிப்பொருளில் பெண் பணியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு நவாலையில் அமைந்துள்ள HNB FINANCEஇன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். மேலும், பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி மதுரங்க ஹீன்கெந்த, பிரதி இணை முகாமையாளர் மற்றும் பிரதம மனித வள அதிகாரி ருவான் பெர்னாண்டோ, பிரதி இணை முகாமையாளர் மற்றும் பிரதான இடர் முகாமையாளர் மகாதேவன் சுதாகர் மற்றும் உதவி பொது முகாமையாளர் மற்றும் சட்ட திணைக்களத்தின் தலைவி திருமதி ராதிகா திசேரா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிறுவனத்தின் பெண் பணியாளர்களுக்காக நடத்தப்பட்ட இந்த வேலைத்திட்டம் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. அந்த நோக்கத்திற்காக, இலங்கையின் பல முக்கிய பேச்சாளர்களும் பெண்கள் தொடர்பான முக்கிய விடயங்களைப் பற்றி கலந்துரையாடினர். பிரபல பேச்சாளர் திருமதி ஷெரின் பெரேரா பெண் ஆதிக்க வளர்ச்சி குறித்தும், தொழில்முறை அழகுக்கலை நிபுணர் திருமதி ருவந்தி ஹுலங்கமுவ அழகியற் கலை குறித்தும், மகப்பேறு குறித்து மகப்பேறு மருத்துவர் திருமதி சத்திய உதாரா சேந்தநாயக்க பெண்களின் ஆரோக்கியம் குறித்தும் கருத்து தெரிவித்தனர்.

HNB FINANCEஇன் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் அவர்களின் பங்கேற்பைப் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

“பெண்களுக்கு பணியிடத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்திலும் பெரும் பொறுப்பு உள்ளது. அவர்களை நாம் எப்போதும் பாராட்ட வேண்டும். பெண்களுக்கு உரிய இடத்தைக் கொடுத்து அவர்களை மதிப்பது நமது தூரநோக்கு சிந்தனையின் ஒரு பகுதியாகும். இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தில், எங்கள் பெண் ஊழியர்களின் அறிவையும் புரிதலையும் வளர்ப்பதையும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என HNBF பிரதம முகாமையாளரும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவருமான உதார குணசிங்க தெரிவித்தார்.

No description available.

மேலும், HNB FINANCE தனது மகளிர் தினத்துடன் இணைந்து சிவில் பாதுகாப்புதிணைக்களத்தின் 2023 சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கும் அனுசரணை வழங்கியது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த மகளிர் தின நிகழ்வில் 350க்கும் மேற்பட்ட பெண் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த செயலமர்வில் கலந்துகொண்ட இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கொழும்பு சமூகப் பொலிஸ் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி மனோஜ் சமரசேகர, இலங்கைப் பெண்களின் பெருமை மற்றும் இலங்கைப் பெண்களின் உரிமைகள் என்ற தலைப்பில் உரையொன்றை நிகழ்த்தினார். இந்த உரையாடலை இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் திருமதி பிரபா ராஜகுரு நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் HNB FINANCE இன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன் மேலும் வந்திருந்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்

இலங்கையின் விருப்பத்திற்குரிய பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது...

ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2024 ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,097.1 மில்லியன் அமெரிக்க...

HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு...