எதிர்க்கட்சிகள் எப்போதுமே அரசாங்கத்திற்கு தேவையான நேரத்தில் ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆதரிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். 21ம் அரசியலமைப்பை ஆதரிக்கவில்லையா? நாம் ஆதரிக்கவில்லை என்றால் அது நிறைவேறி இருக்குமா?
தேவைப்படும் போது ஆதரவு கொடுத்தோம். தேர்தல் நடத்த வேண்டும். எங்களுக்கு ஜனநாயகம் முக்கியம்..” எனத் தெரிவித்திருந்தார்.