இந்நாட்களில் மிகவும் பிரபலமான தலைப்பு சர்வதேச நாணய நிதியம் மற்றும் எமது நாடு பெற்ற கடன் தொகைக்கான அங்கீகாரம், அந்த உதவியின் மூலம் அரசாங்கத்தைக் கட்டிக்காக்கும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அணியினருக்கு மகிழ்ச்சியே என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“இதுவரை, ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் செயற்பாட்டாளர்களுக்கு ஐ.தே.க.வினால் உடனடி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்தச் செய்தியில், ‘இன்று, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் உதவித் தொகையைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக, அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் காலை 10:30 மணியளவில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
சந்தர்ப்பம் அறிவிக்கப்படும் போது உங்கள் வீட்டிலிருந்து மட்டுமே பட்டாசுகளை கொளுத்த தயாராக இருங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது அருமை. சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிக்கு அங்கீகாரம் கிடைத்ததையடுத்து, ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தனது செயற்பாட்டாளர்களுக்கு வீடுகளில் இருந்து பட்டாசுகளை வெடித்து பெரும் நிகழ்ச்சியை நடத்தி நாட்டுக்கு நகைச்சுவையை ஏற்படுத்துமாறு செய்தி அனுப்புகின்றார்.
மக்கள் கூடும் சந்திப்புகளில் இந்த பட்டாசுகளை கொளுத்துவதை தவிர்த்து,வீட்டில் பட்டாசு கொளுத்துபவர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை என்பது இரண்டு கருத்து. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் குழுக்கள் சந்திகளுக்கும் நகரங்களுக்கும் சென்று மக்கள் இருக்கும் இடங்களில் பட்டாசு வைத்தால் அவர்கள் மோசமாக அடிபட்டு திரும்பி வருவார்கள்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இதனை முதல் பிரச்சினையாகக் கருதுகிறது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவது இது 17வது முறையாகும்.
16 தடவைகள் கொளுத்தப்படாத பட்டாசுகளை இன்று 17ஆவது தடவையாகவும் கொளுத்துமாறு ரணில் விக்கிரமசிங்க தரப்பினர் அனைத்து பிரதேச செயற்பாட்டாளர்களுக்கும் அறிவித்துள்ளனர். ஆனால் கடன் வாங்கி இப்படி சந்தோஷமாக இருந்தால் இந்தக் கடனை அடைக்க எங்கே திட்டம் என்று கேட்கிறோம்..”