தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும் ஏனைய அச்சிடும் பணிகளுக்காகவும் கடனாகப் பெறப்பட்ட காகிதம் மற்றும் உபகரணங்களுக்கான பணத்தை செலுத்துவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் காகிதம் மற்றும் உபகரணங்களை மீளப் பெற்றுக்கொள்ளலாம் என அரச அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கானி லியனகே தெரிவித்திருந்தார்.
டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்; கடனாக வாங்கிய காகிதம் மற்றும் உபகரணங்களுக்காக வழங்குனர்களுக்கு சுமார் 400 மில்லியன் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
வழங்குனர்கள் கடன் பணத்தைப் பெற நீதிமன்றத்திற்குச் செல்லாவிட்டாலும், அரசாங்க அச்சகத்தில் நம்பிக்கையுடன் கடன் பணத்தைக் கேட்டு கவலைப்படாமல் இருந்தாலும், சில நேரங்களில் காகிதம் மற்றும் உபகரணங்களைத் திரும்பப் பெறலாம் என அவர் தெரிவித்திருந்தார்.