மாநகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி உடுகம்பலையில் தனது வீட்டை எரித்து நாசப்படுத்தியமை தொடர்பான முறைப்பாட்டினை விசாரணை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி அமைச்சர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வீடு எரிப்பு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுவதற்கான திகதி மற்றும் நேரத்தை வழங்குமாறு நான்கு தடவைகள் எழுத்து மூலம் கோரியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, தனது முறைப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்தை ஈர்த்து இந்த விடயத்தை முன்வைப்பதற்கு பொருத்தமான திகதி மற்றும் நேரத்தை வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனது கடிதத்தில் மேலும் கோரியுள்ளார்.