follow the truth

follow the truth

December, 22, 2024
Homeஉலகம்உலக அரசியலில் ஒரு தனி முத்திரை : சீன ஜனாதிபதி ரஷ்யாவிற்கு

உலக அரசியலில் ஒரு தனி முத்திரை : சீன ஜனாதிபதி ரஷ்யாவிற்கு

Published on

ரஷ்யாவும் சீனாவும் பொதுவான சவால்களை எதிர்கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இன்று (20) ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ள சூழலில் ரஷ்ய ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தாளான People’s Daily செய்தித்தாளுக்கு எழுதிய கடிதத்தில், ரஷ்ய ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்யா-சீனா கூட்டுறவின் சிறப்புத் தன்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் சிறப்பு அறிகுறியாக நாட்டின் வருகையை விவரித்தார்.

மேலும் சீன ஜனாதிபதியை பழைய நண்பர் என புடின் தனது கடிதத்தில் அறிமுகம் செய்திருப்பதும் சிறப்பு.

உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து உக்ரேனிய குழந்தைகளை ரஷ்யாவுக்கு நாடு கடத்திய குற்றச்சாட்டில் ரஷ்ய ஜனாதிபதிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது பிடியாணை பிறப்பித்த பிறகு, ரஷ்யாவுக்கு செல்லும் முதல் வெளிநாட்டு அரசுத் தலைவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆவார்.

எவ்வாறாயினும், சீனாவோ அல்லது ரஷ்யாவோ அங்கம் வகிக்காத சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமான அட்டூழியம் என்று ரஷ்யா கூறுகிறது.

இந்த பயணத்தின் போது, ​​இரு நாட்டு தலைவர்களும் கூட்டாண்மை மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சர்வதேச அளவில் ரஷ்ய-சீன ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்வார்கள் என்று கிரெம்ளின் கூறுகிறது.

முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அல்பேனியாவில் டிக்டோக்கிற்கு தடை

அல்பேனியா அரசாங்கம் TikTok அணுகலை ஒரு வருடத்திற்கு முடக்க முடிவு செய்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தின் அடிப்படையில் இந்த...

உகண்டாவில் பரவும் ‘டிங்கா டிங்கா’ வைரஸ்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் டிங்கா டிங்கா என்று பெயரிடப்பட்ட புதுவகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ்...

தாய்வான் நாடாளுமன்றில் அமளிதுமளி

அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள சில சட்டங்கள் திருத்தம் செய்வதில் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, தாய்வான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்...