குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சலிந்து மல்ஷிக குணரத்ன எனப்படும் குடு சலிந்துவைக் கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனு தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.
அதன்படி, இது தொடர்பான வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.