ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவசர பயணமாக உக்ரைனில் உள்ள மரியுபோல் நகருக்கு சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் படைகளுடனான கடுமையான மோதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட மரியுபோல் நகருக்கு ரஷ்ய ஜனாதிபதி விஜயம் செய்வது இதுவே முதல் முறை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததை அடுத்து இந்த விஜயம் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
இந்த விஜயத்தின் போது ரஷ்ய ஜனாதிபதி பல இடங்களுக்கு விஜயம் செய்ததாகவும், நகரவாசிகளுடன் சிநேகபூர்வமாக உரையாடியதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.