எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தை ஏற்று கடன் உதவியைப் பெறாவிட்டால் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நாடு முடிந்து விடும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (19) தெரிவித்தார்.
களுத்துறை விமானப்படை தளத்தில் ஸ்ரீலங்கா சாரதிகளுக்கான தொழில்நுட்ப நடைமுறை பயிற்சிகளை வழங்கும் நிகழ்ச்சியின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது;
“.. கடனை அடைக்க முடியாத நாடாக உலகமே வழக்கு தொடரும் நிலைக்கு வந்துள்ளோம். ஒரு ஜனாதிபதி, ஒரு பிரதமர், ஒரு அரசியல்வாதி பொறுப்பேற்க முடியாது. சுதந்திரத்திற்குப் பிறகு, குறிப்பாக 77க்குப் பிறகு, நாம் உலகத்திலிருந்து கடன் வாங்கினோம். அவர்களால் பணம் செலுத்த முடியாத நிலையில், பணம் அச்சிடப்பட்டது. இது தொடர்ந்து செய்யப்பட்டது. எனவே, இதற்கு ஒருவர் பொறுப்பேற்க முடியாது.
அதனால்தான் இந்தப் படுகுழியில் இருந்து வெளிவர உதவுமாறு உலகத்திடம் கேட்டோம். இதற்காக 28 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. அதில் இருந்து 20 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன..”