ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது பிடியாணையை பாகிஸ்தான் நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக இம்ரான் கானின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கானின் சட்டக் குழுவின் ஒரு பகுதியான பைசல் ஃபரீத் சவுத்ரி, அல் ஜசீராவிடம், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம், அமர்வை ஒத்திவைத்ததாகவும், மார்ச் 30 ஆம் திகதி அடுத்த விசாரணையில் அவர் முன்னிலையில் இருப்பதை உறுதிப்படுத்துமாறு முன்னாள் பிரதமருக்கு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.
இம்ரான் கான் அதிகாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் ஆஜரானதைக் குறித்த பிறகு பிடியாணைகள் இரத்து செய்யப்பட்டன. இம்ரான் கானின் கார் இன்று நீதிமன்றக் கட்டிடத்தின் வாயிலை அடைந்ததாகவும் அவர் அல் ஜசீரா செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.