புதிய பொலிஸ் மா அதிபர் பதவி உட்பட ஏனைய முக்கிய பதவிகளுக்கான நியமன முறைமையில் பொதுமக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், இந்த விடயத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை வலியுறுத்தியுள்ளது.