உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பணம் இல்லை என அரசாங்கம் தொடர்ந்தும் கூறினால், தமது கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களின் கொடுப்பனவில் பாதியை வழங்கத் தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை எட்டிலிருந்து பத்தாயிரமாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு பண விவகாரம் தடையாக இருக்குமானால் அதில் பாதி அல்லது 75 வீதத்தை நன்கொடையாக வழங்கத் தயார் எனவும் திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகமாக இருந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் பாதியாக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதாக அவர் கூறினார்.
அரசாங்கத்திற்கு பணப்பிரச்சினை இல்லை, வாக்குப் பிரச்சினை என்பதே உண்மை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.