2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் 01 ஆம் கட்டத்தின் கீழ் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் 02 ஆம் கட்டம் ஏப்ரல் 17 ஆம் திகதி திங்கட்கிழமை தொடங்கும்.
2022 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சைக்காக மே 13 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.