follow the truth

follow the truth

December, 22, 2024
HomeTOP1வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து கடிதம் 

வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து கடிதம் 

Published on

இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் முழு வெளிப்படைத்தன்மையைப் பேணுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு அறிவித்துள்ளார்.

பகிரங்க கடிதமொன்றில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இருதரப்பு மற்றும் தனியார் கடனாளிகளுக்கு இடையிலான பரஸ்பர ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் பொதுக் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இலங்கையுடன் சாதகமாகச் செயற்படுமாறு கடனாளிகளை ஜனாதிபதி தனது கடிதத்தில் ஊக்குவித்துள்ளார்.

இதேவேளை, இருதரப்பு கடன் வழங்குனர்களுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் சமாளிப்பதற்கு தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை எதிர்வரும் 20ஆம் திகதி கூடிய பின்னர், விரும்பிய இலக்கை எட்டுவதற்கு தமது உடன்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறுகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கு விடுக்கப்பட்ட கடிதம் தொடர்பில் தெஹியோவிட்ட பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொய் சொல்ல மக்களுக்கு முழு உரிமை உண்டு..- கொட்டச்சி

எந்தவொரு உண்மையையும் பொய் என்று கூறுவதற்கும், எந்தவொரு பொய்யையும் உண்மை என்று கூறுவதற்கும் மக்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு...

பண்டிகை காலங்களில் விற்கப்படும் கேக் விலைகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க கோரிக்கை

பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அகில இலங்கை...

எழுபத்தாறு வருடங்கள் மஹிந்த, ரணிலுடன் கழித்த மக்கள் ஆறு அல்லது ஏழு மாதங்கள் குரங்குகளுடன் இருக்க முடியாதா? – பிமல்

எழுபத்தாறு வருடங்கள் மஹிந்த, ரணிலுடன் இருந்தவர்கள் குரங்குகளுடன் இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்கள் இருப்பது கடினம் அல்ல...