தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 150 ரூபா வரை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா வரியை விதிக்க அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்த நிலையில், உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் ஒரு கிலோ உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை 200 ரூபாவாக அதிகரிக்கக்கூடும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.