சாதாரண செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரையில் 300 இற்கும் மேற்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் பவுசர்கள் விநியோகத்திற்கு தயாராக உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.யூ.மொஹமட் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், லாங்.வி.எம். நிதி அதிகாரிகள் சங்கம் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடாது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஆதரவை வழங்கும். பொது மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும் மக்கள் வங்கியின் 352 கிளைகளில் 330 கிளைகள் முழுமையாக இயங்கி வருவதாக மக்கள் வங்கியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை வங்கியின் தலைமைக் காரியாலயத்தின் அனைத்துத் திணைக்களங்கள் உட்பட 265 கிளைகளின் வங்கிச் சேவைகள் பொதுமக்களுக்கு சேவையாற்றும் வகையில் வழமை போன்று இயங்கி வருவதாக இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் ரசல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
107 இ.போச. டிப்போக்களும் இன்று காலை 11.00 மணி வரையான நிலவரப் படி வழமையான கால அட்டவணையின்படி இயங்குவதாகவும் 08 தொழிற்சங்கங்களில் ஜே.வி.பி தொழிற்சங்கம் தவிர்ந்த 07 தொழிற்சங்கங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்
இ.போச. இனது 8 தொழிற்சங்கங்களில் ஜே.வி.பி தொழிற்சங்கம் தவிர்ந்த ஏனைய 7 தொழிற்சங்கங்களும் அரசுடன் இணைந்து செயற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.