முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராக இருந்த போதிலும், டலஸ் அழகப்பெரும கோட்டாபய ராஜபக்சவிடம் விடுத்த கோரிக்கையால் அது நடக்கவில்லை என விமல் வீரவன்ச தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் முன்னணியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
“பதுளையின் டிலான் மயிரிழையில் தப்பினார். யோஷிதா கூட பதுளையில் இருந்து தேர்தலில் களமிறங்க முயன்றார். அந்நாட்களில் மஹியங்கனையில் தேனுகவின் முகம் சுருங்கியிருந்தது. யோஷித பேபியை களமிறக்குவதை ஒரு மாதிரி டலஸ் நிறுத்தினார், கோட்டாபயவிடம் இந்த வேலையை மட்டும் செய்யாதீர்கள், அப்புறம் துணி இன்றி தான் வீதியில் இறங்க நேரிடும் என்று டலஸ் கூறியதில் தப்பினோம்..
அவ்வாறெல்லாம் எப்படித்தான் நினைக்கிறார்கள் என்று எனக்கு அது புரியவில்லை. சுமார் அறுபது குழந்தைகள் இருந்தால். அம்மட்ட சிரி கஜ வெனவா.. இந்த நாடு அவர்களின் சொத்தா? புதையலா?..”