அழைப்பாணை பிறப்பித்தல் மற்றும் வழங்கல் தொடர்பாகத் தற்போது காணப்படும் நடைமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அழைப்பாணை தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள குடியியல் சட்டத் திருத்தங்கள் தொடர்பான குழு இதற்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
அதற்கமைய, வழக்கொன்றின் தரப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பும்போது மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி குறுஞ்செய்தி போன்ற சமகாலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் தொடர்பாடல் வழிமுறைகளைப் பயன்படுத்துவது தொடர்பிலும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த குழு பரிந்துரைத்துள்ள திருத்தங்களை உள்ளடக்கிக் குடியியல் வழக்குக் கோவை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.