கொள்கை மற்றும் வாழ்க்கைச் சுமைக்கு எதிராக நாளை (15) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க பல தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இந்நிலையில், நாடளாவிய ரீதியாக உள்ள அரச பாடசாலைகளில் ஆசிரியர்கள் நாளை (15) ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆசிரியர்களின் சம்பளத்தை உடனடியாக உயர்த்தி ஆசிரியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்குமாறு கோரி இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.