பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அடுத்த சில மணி நேரத்தில் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு பிணையில் வெளிவர முடியாத கைது பிடியாணைகள் பிறப்பிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இருப்பினும், இம்ரான் கான் சமீபத்தில் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தன்னை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கக் கோரி, நீதிமன்றம் தண்டனை வழங்குவதை ஒத்திவைத்தது.