கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கண்ணீர் புகை குண்டுகளின் நிலை மற்றும் பயன்படுத்தப்பட்ட விதம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொது ஒழுங்கு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளரிடம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெப்ரவரி 26ஆம் திகதி கொழும்பில் தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை வீச்சுக்கு இலக்காகி உயிரிழந்த தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் நிமல் அமரசிறி சார்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கருத்திற்கொண்ட நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அமரசிறியின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று இடம்பெற்றதுடன், அவரது மகன் சாமர சாட்சியமளித்துள்ளார்.
பொலிசார் பயன்படுத்திய கண்ணீர் புகைக் குண்டுகளின் விளைவால் தனது தந்தையின் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக சாமர தெரிவித்துள்ளார்.