பாண் விலை மேலும் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைத்துள்ள நிலையில், 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தொழிற்சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக விலையை மேலும் குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்திருந்தார்.