பெற்றோர்களுக்கு குழந்தைகளை வளர்ப்பது சிரமமாக இருந்தால் அந்தக் குழந்தைகளை ஏற்றுக்கொள்ள தமது அமைச்சு தயாராக இருப்பதாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், அவ்வாறான சிறுவர்கள் பற்றிய தகவல்களை 1929 ஆகிய இலக்கங்களுக்கு வழங்குமாறு கோரியிருந்தார்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் சிசுவை புகையிரதத்தில் விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாய் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் குறித்த சம்பவம் தொடர்பில் பிழை என்பது புலனாகிறது என்றாலும் மனிதாபிமான முறையில் இதனை கையாண்டிருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.