மலாவியில் ஃப்ரெடி (Freddy) புயலால் 100 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மலாவியின் வர்த்தக தலைநகரான Blantyre தான் அதிக சேதத்தை சந்தித்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
மேலும் 134 பேர் சூறாவளி காரணமாக காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மலாவியிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.