சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜேம்ஸ் பொண்ட் அல்லது 2021 இல் வெளிவந்த வேறு எந்த மார்வெல் படத்தையும் மறந்துவிடுங்கள். சீனாவின் இந்த ‘Battle at Lake Changjin’ படம் பாக்ஸ் ஆபிஸ் எண்களில் அனைத்து முனைகளிலும் முன்னணி வகிக்கிறது
‘Battle at Lake Changjin’ இப்போது 2021 ஆம் ஆண்டின் உலகின் நான்காவது வெற்றிகரமான திரைப்படமாகும். ஏனெனில் இது சீன பாக்ஸ் ஆபிஸில் தனது கோட்டையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன் இரண்டாவது வார இறுதியில் மட்டும் படம் சாதனைகளைப் படைத்து வருகிறது. செப்டம்பர் 30 முதல் படம் மொத்தமாக 633 மில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளது.
வார இறுதியில் இரண்டாவது இடம் பிடித்த படம், ‘என் நாடு, என் பெற்றோர்’ 19.6 மில்லியன் டொலர்களை சம்பாதித்தது.
பாக்ஸ் ஆபிஸ் மோஜோவின் தரவுகளின்படி, சமீபத்திய வார இறுதிக்கு முன்னதாக உலகளவில் 402 மில்லியனாக இருந்த மார்வெலின் ‘The Legend of Shang-Chi’ யை விட ‘Battle at Lake Changjin’ பாக்ஸ் ஆபிஸ் முன்னணியில் உள்ளது.