follow the truth

follow the truth

December, 23, 2024
Homeவிளையாட்டுமுதலாவது டெஸ்ட் - நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி

முதலாவது டெஸ்ட் – நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி

Published on

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி கிறிஸ்ட்சேர்சில் ஆரம்பமான இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 355 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 373 ஓட்டங்களைப் பெற்று 18 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

இந்தநிலையில், இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய இலங்கை 302 ஓட்டங்களை பெற்று, 285 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இரண்டாவது இன்னிங்ஸுக்காக இலங்கை அணி சார்பில் அதிகபடியாக எஞ்சலோ மெத்தியூஸ் 112 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ப்ளேர் டிக்னர் 4 விக்கெட்டுகளையும், மெட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த நிலையில், வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாடிய நியூஸிலாந்து, அணி வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்ஸன் ஆட்டமிழப்பின்றி 121 ஓட்டங்களையும், டேரில் மிட்செல் 81 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஹசித பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் வீரராக டேரில் மிட்செல் (102 மற்றும் 81 ஓட்டங்கள்) தெரிவானார்.

இந்தநிலையில், 2 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1 – 0 என நியூஸிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

இதேவேளை, இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, வெல்லிங்டனில், எதிர்வரும் 17 முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியில் தான் பேசுவாரா? ஜடேஜாவை விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள்

பார்டர் கவாஸ்கர் டிராபி நடந்து வரும் சூழலில், பாதியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். அவரது...

இடதுகை பேட்ஸ்மேன்களின் எதிரி : முரளிதரன், வார்னேவை விஞ்சிய அஷ்வின்

"சரியான நேரத்தில் சரியான பந்தை வீசினால் வரலாற்றையே மாற்ற முடியும். பேட்டர்களின் மனநிலையை புரிந்துகொள்வது என்பது எனது ரகசிய...

அணியில் இருந்து துனித் வெல்லாலகே நீக்கப்பட்டது எதற்கு?

நியூசிலாந்து ஆடுகளங்களில் விளையாடும் போது மேலதிக வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால், துனித் வெல்லாலகே...