கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி இன்டர்சிட்டி கடுகதி ரயில் ஒருகொடவத்த புகையிரத பாலத்திற்கு அருகில் தடம் புரண்டது.
இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பிரதான மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவை தடைபட்டுள்ளதாக பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பை வந்தடையும் சில புகையிரதங்களில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தடம் புரண்ட யாழ்தேவி புகையிரதத்தை தடம் புரளும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.