சிசுவை புகையிரதத்தின் மலசலகூடத்தில் விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் அதிகாரிகள் குழு நேற்று (11) குழந்தையின் தாயை கைது செய்ததுடன், அவரை சங்கடமாக்கும் முறையி நடந்து கொண்டதாக அவரைக் கைது செய்த பண்டாரவளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளுக்கு இணங்காதமை தொடர்பிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தாயை பொலிசார் கைது செய்தமை, சந்தேக நபரை விசாரணை செய்தல், விசாரணையின் விபரங்களை கருத்தில் கொள்ளாமல் பெண்ணை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியமை தொடர்பிலும் விசாரணை நடத்தப்படவுள்ளது.