ஐவரி கோஸ்ட்டில் கால்பந்து போட்டியின் போது வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அண்மையில் அபிட்ஜானில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது முஸ்தபா ஜில்லா என்ற 21 வயது வீரர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போட்டியின் போது திடீரென சுருண்டு விழுந்த வீரரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, வீரர்களின் உடல்நிலையை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும் என, நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளில், ஐவரி கோஸ்ட்டில் மூன்று கால்பந்து வீரர்கள் திடீர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது.