follow the truth

follow the truth

January, 9, 2025
HomeTOP1மின்சார வாரியத்தின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பம்

மின்சார வாரியத்தின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பம்

Published on

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், கூட்டு ஒப்பந்தங்களில் இருந்து விலகி, நிதிக் கட்டுப்பாடு தொடர்பாக தேவையான புதிய கொள்கை முடிவுகளை எடுப்பதே முதல் கட்டம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கான பாதை வரைபடம் மற்றும் காலக்கெடு குறித்தும் அமைச்சரவைக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதுடன், இறுதி வரைவு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் மற்றும் JICA ஆகியவை இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளன.

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் அந்த நிறுவனங்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும், அங்கு வழங்கக்கூடிய ஆதரவு தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, நிதிக் கணக்காய்வு, மனிதவளக் கணக்காய்வு, சொத்துக் கணக்காய்வு மற்றும் சட்டமியற்றுதல் ஆகியவற்றுக்கு உரிய நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஏற்கனவே இணங்கியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka அனைவரினதும் விருப்பம், ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய வேலைத்திட்டம்

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ்...

ஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தல்

தற்போதைய அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தலை அறிமுகப்படுத்தும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி...