இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த ஆகியோர் முன்வைத்துள்ள சிறப்புரிமைப் பிரச்சினை காரணமாக சட்டவாக்கத்துறைக்கும் நீதித்துறைக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகள் உருவாகுவதால் அந்த சிறப்புரிமைகளை புறக்கணிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பிரதி சபாநாயகரிடம் இன்று கோரிக்கை விடுத்தனர்.