முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கத்தாரில் இன்று ஆரம்பமாகிறது.
இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா மஹாராஜாஸ் அணி, ஆசிய லையன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆசிய லையன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான திலகரத்ன டில்ஷான், தில்ஹார பெர்னாண்டோ, இசுரு உதான, திசர பெரேரா மற்றும் உபுல் தரங்கா ஆகியோர் ஆசிய லெஜண்ட்ஸ் அணியில் விளையாடவுள்ளனர்.