நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால் நீதித்துறை மிகவும் கண்டிப்புடன் செயற்படும் என பிரதான எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் இன்று (10) தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குமாறு நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும், நீதித்துறையும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாக, அரசு தற்போது பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினைகளை எழுப்ப ஆரம்பித்துள்ளதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நீதித்துறையையும் தேர்தல்கள் ஆணைக்குழுவையும் அடக்குவதற்காகவே இவ்வாறான விடயங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.