எந்தவொரு அரசியல் கட்சியிலிருந்தும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்கப் போவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்ட அரசியல் கட்சியொன்றின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியிருந்தார்.
அமைச்சரின் அறிக்கையானது இலங்கையின் ஒரு பொதுவான அரசியல்வாதியின் சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்ட ஜனக ரத்நாயக்க, “அவர்கள் மறைமுக நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருப்பதால் மக்களுக்காக மட்டுமே பணியாற்றுகிறார்கள். ஆனால் நான் மக்களுக்காக ஒரு உண்மையான நோக்கத்துடன் பணியாற்றுகிறேன், அதை அவர்களால் கூட நம்ப முடியாது..” எனத் தெரிவித்திருந்தார்.