அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 107 நாட்களின் பின்னர் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, களியாட்ட விடுதிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் முடி திருத்தும் நிலையங்களில் மக்கள் வரிசையாக நிற்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சிட்னி நகரம் சுமார் 4 மாதங்களாக ஊரடங்கு அமுலப்படுத்தப்பட்ட நிலையில், நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் அந்நகர மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.