மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிகளை ஏற்றிச் செல்லும்
போர்வையில் கிட்டத்தட்ட 1,000 பஸ்கள்; மாகாணங்களுக்கு இடையே இயக்கப்படுவதாக லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
குற்றம் சாட்டியுள்ளது.
லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் பயணிகளிடமிருந்து மிக அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்; அம்பாறையிலிருந்து கொழும்பு செல்லும் பயணிகளிடமிருந்து ரூ. 2,500
கட்டணங்கள் அறவிடப்படுகின்றது என்று கூறினார்.
இதுபோன்ற நடவடிக்கைகளுக்காக பல சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாலும், அரசியல் செல்வாக்கு காரணமாக
அவர்கள் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.