ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் பதவிக்கு சரத் ஏக்கநாயக்கவை நியமித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விலகியதன் காரணமாகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.