கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 01, 02, 03, 04 மற்றும் கொழும்பு 07, 08, 09, 10, 11 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி நாளை (04) பிற்பகல் 2 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (05) பிற்பகல் 2 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மாளிகாகந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் விநியோகம் செய்யும் குழாய்த்திட்டம் தொடர்பான வேலைத்திட்டம் ஊடாக மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர்வெட்டினை அமுல்ப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.