துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பால்மா தொகை இன்று(11) முதல், புதிய விலையில் சந்தையில் விற்பனைக்கு விட முடியுமென பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெற்றின் தற்போதைய விலை 1,195 ரூபாவாகவும் அதேவேளை 100 ரூபாவால் அதிகரிக்கப் பட்டுள்ள 400 கிராம் பால்மா பக்கெற்றின் விலை 480 ரூபாவாகவும் சந்தையில் விற்பனை செய்யப்படும் என இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது