follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1இரட்டிப்பாகும் விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவு

இரட்டிப்பாகும் விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவு

Published on

உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கான தினசரி கூட்டுக் கொடுப்பனவான 900 ரூபாவை 2,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஒட்டுமொத்த மதிப்பீட்டு கொடுப்பனவை இரட்டிப்பாக்குவதற்கும் நேற்று (01) அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் விசேட அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக ஆசிரியர்களிடம் இரண்டாவது முறையாக நேற்று விண்ணப்பங்களை கோருவதற்கு பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தனியார் பல்கலைகழகங்களை ஒழுங்குபடுத்த தனி நிறுவனத்தை நிறுவவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்களைப் பெற்றனர்.

15 ,000 பேர் விடைத்தாள் மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ளனர், ஆனால் இரசாயனவியல், பௌதீகவியல், இணைந்த கணிதம் போன்ற பாடங்களுக்கு போதுமான ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை.

தினசரி மதிப்பீட்டு உதவித் தொகை உயர்த்தப்படாததால், ஏராளமான ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை.

கொடுப்பனவுகளை அதிகரிக்கும் புதிய தீர்மானத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பார்கள் என பரீட்சை திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...