இன்று (2) முதல் மார்ச் 7ம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என்று நெதர்லாந்து புவியியலாளர் ஃபிராங்க் ஹூனர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இது பூமியின் மேலோட்டத்தின் வலுவான இயக்கங்கள் காரணமாக உணரப்படும் ஒன்றாகும். ஈராக் புவியியலாளர் சலின் அமாதியும் இதனை உறுதி செய்துள்ளார்.
இதேவேளை நேற்று (1) ரிக்டர் அளவுகோலில் 2.5 முதல் 5.4 வரையிலான 49 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜப்பான், புவேர்ட்டோ ரிக்கோ, அலாஸ்கா, பிஜி, கிரீஸ், சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.