follow the truth

follow the truth

January, 19, 2025
HomeTOP2IMF கடன்களுக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் உறுதி

IMF கடன்களுக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் உறுதி

Published on

சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் கோரிக்கை விண்ணப்பத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி உறுதியளித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இதற்கான ஆவணங்களை சீனா இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி, நிதி அமைச்சுக்கு கையளித்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாஓ நின்க், நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான குறுகிய கால கடனை செலுத்துவதற்கு இரண்டு வருடங்கள் வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்கள் மற்றும் பலதரப்பு கடனளிப்பவர்கள் உட்பட வர்த்தக கடன் வழங்குநர்கள் இலங்கை தொடர்பாக அதிகபட்ச பங்களிப்பை வழங்குமாறு தொடர்ச்சியாக கோரப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சாதகமான பங்கை வகிக்க சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காலி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீப்பரவல்

காலி - தனிபொல்கஹ சந்தி பகுதியிலுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பரவலை கட்டுபடுத்துவதற்காக...

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பணிப்புரை

பல்வேறு காரணிகளால் இந்நாட்டில் மக்களுக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குவது சவாலாக மாறியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன...

ஹோட்டல் அறையொன்று உடைந்து விழுந்ததில் 06 மாணவர்கள் காயம்

கினிகத்தேன நகரிலுள்ள உணவகமொன்றில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த அறையொன்று இன்று(18) உடைந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தரம் 10...