புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டம் இன்று காலை 08 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
தொழிற்சங்கப் போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தங்களது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் எட்டாம் திகதியின் பின்னர், பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.