உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (03) கூடவுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் ஆணைக்குழுவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
ஜூம் ஊடாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், உரிய நிதிப் பற்றாக்குறையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னெடுத்துச் செல்வதற்குத் தடையாக உள்ளமை குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
உள்ளுராட்சி மன்ற வாக்களிப்பு பணிகள் தாமதமாவதால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.