துறைமுக ஊழியர்கள் துறைமுக நுழைவு வாயில் முன் வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக கொழும்பு கோட்டையை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிச் சட்டத்திற்கு எதிராக தொழில்துறையினர் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துடன் துறைமுக ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.