பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான நிலநடுக்கம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலநடுக்கம் 362 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் அல்லது பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.