follow the truth

follow the truth

November, 14, 2024
Homeஉள்நாடுவங்கிகள் பொதுமக்கள் சேவைக்காக நாளையும் செயற்படும்

வங்கிகள் பொதுமக்கள் சேவைக்காக நாளையும் செயற்படும்

Published on

தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாளையும் (01) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரிவளிப்பதற்காக அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவார்கள் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

வங்கித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அரச வங்கிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், வாடிக்கையாளர்களுக்கு தடங்கல் ஏற்படாத வகையிலும் வங்கிச் செயல்பாடுகளை பேணுவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், நாட்டில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் விரிவான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கும் இவ்வேளையில் வங்கிக் கட்டமைப்பு செயலிழந்தது என்ற செய்தி, சர்வதேச சமூகத்திற்கு செல்வது, நாட்டுக்கு நல்லதொரு நிலைமை அல்ல எனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கும் சந்தர்ப்பத்தில் சாவியை வழங்குதல், தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டகங்களின் சாவியை கையளித்தல் போன்ற ஏற்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கையை வெளியிடுவது வழமையான மரபு என்றாலும் நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஒன்றிணைந்த வங்கித் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அவ்வாறானதொன்றும் இடம்பெறவில்லை என இந்தக் கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

அதன்படி, வங்கித் தலைவர்கள் தலைமையிலான உயர் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க ஒப்புக்கொண்டது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று சேவையில் ஈடுபடவிருந்த சில ரயில்கள் இரத்து

ரயில் சாரதிகள் மற்றும் ரயில் உதவியாளர்கள் சேவைக்கு சமுகமளிக்காமை காரணமாக இன்றைய தினத்திற்குள் 33 ரயில் சேவைகள் இரத்து...

இதுவரையிலான தேர்தல் வாக்களிப்பு வீதம்

பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று காலை 10 மணிவரையில் கொழும்பு - 20% யாழ்ப்பாணம் -...

இன்று பலத்த பாதுகாப்பு – சுமார் 90, 000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில்

இன்று இடம்பெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்காக சுமார் 90, 000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி...