பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (தற்காலிக ஏற்பாடுகள்) (1979 இலக்கம் 48) பதிலாக தயாரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்க நீதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.