follow the truth

follow the truth

January, 7, 2025
Homeஉள்நாடுமார்ச்சில் பூமியின் டெக்டோனிக் தகடுகளில் ஒரு வலுவான நடுக்கம்

மார்ச்சில் பூமியின் டெக்டோனிக் தகடுகளில் ஒரு வலுவான நடுக்கம்

Published on

மார்ச் முதல் வாரத்தில்,பூமியின் டெக்டோனிக் தகடுகளின் வலுவான இயக்கங்கள் ஏற்படக்கூடும் என ஈராக்கில் உள்ள பாக்தாத் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் ஒருவர் கணித்துள்ளார்.

பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் இடையே சந்திரன் வரும்போது டெக்டோனிக் தகடுகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறுகிறார்.

துருக்கிய-சிரிய எல்லையில் நிலநடுக்கத்தை முதலில் கணித்த நெதர்லாந்து விஞ்ஞானி ஃபன்சா ஹூகர்பீட்ஸும் இதே கருத்தை ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.

இருப்பினும், கிரக நிலைகளின் அடிப்படையில் பூகம்பங்களை கணிப்பது பூகம்பங்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுருக்களுக்கு முரணானது என்று அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதேவேளை, நேற்று (27) துருக்கியின் மாலத்யா நகருக்கு அருகில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 110 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் 29 கட்டிடங்கள் இடிந்ததாக துருக்கி அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட 60,000 பேரைக் கொன்ற துருக்கி-சிரியா நிலநடுக்கத்திற்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மூலம் : Egypt Independent

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

TELL IGP மற்றும் l-need சேவைகள் புதிய வடிவில்

TELL IGP மற்றும் l-need சேவையை புதிய முகத்தில் தொடங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களின்...

திரிபோஷ நிறுவனத்தை அரசுக்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் கொண்டு செல்ல தீர்மானம் 

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் நிருவகிக்கப்படும் கந்தான பிரதேசத்தில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை, நாட்டு மக்களின்...

புதிய ஆண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை

பாராளுமன்றம் நாளை முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது. சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற...