யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நான்கு புற்றுநோய் வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அந்தந்த வைத்தியசாலைகளை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களைத் தீர்மானித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த மாவட்டங்களில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளைத் தயாரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.